12
மூலம்
கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே.
எளிய தமிழில்
திருமாலையாய் மணங்கமழ என் நாபாடுவதுன் புகழே
ஏழுலகக்கும் தாயே எனைப் படைத்த அன்னையே
நினைப்பேனுன் புகழ் கற்பேன் உன்நாமம் கசிவேனுன் நினைவில்
அரிய உனை நானறிய என்செய்தேன் தவம் நானறியேன்
புண்ணியம் பல புரிந்தே உனை நயந்தேனோ