13
மூலம்
பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே?
எளிய தமிழில்
நயந்தேனே உலகடக்கிய உத்தமியேயென் உறுதுணையே
ஈன்றவளே ஈன்றவண்ணம் காப்பவளே மறைப்பவளே
ஈசனுக்கு மூத்தவளே முகுந்தனுக்கு மூவா இளையவளே
அருந்தவத் தலைவியே அபிராமி அன்னையே அழகே
உனையன்றி வேறுதெய்வம் நயப்பேனோ