14
மூலம்
வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே
எளிய தமிழில்
நயப்பேனே தேவியுன் தன்மை வியத்தகு கருணை
நான்முக பிரம்மனும் பாற்கடல் விஷ்ணுவுமுனை சிந்திப்பர்
பரமானந்த ஸ்வரூபி பரமசிவன் அன்பாலுனை பந்திப்பார்
பாரிலுனை தரிசிப்பவருக்கு நீயளிக்கும் சித்தி இனிதாம்
பரமேஸ்வரியே உளங் குளிர் திருவருளே