18
மூலம்
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே.
எளிய தமிழில்
கொண்டவுன் சிவனுடன் இடமகலா இறைவி நீயும் மகிழும்
கருத்தி லொன்றிக் கல்யாண கோலம் களிப்பாய்த் தோன்றும்
கரும்பா யினிக்குமென் மனம் மகிழுமென் அகந்தை யழியும்
கண்ணார உமையொருபாகக் கோலத்தில் நீ கொடுக்கும் காட்சி
காலனெ ன்னுயிர் கொள்ளுங் காலமென் கண்முன் நிற்கவே