19
மூலம்
வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
எளிய தமிழில்
நிற்கவே நிலைக்குதே யென்மனம் நின் மணக்கோலம்
பொற்கோலம் நின்னழகிய திருக்கோலம் ஆனந்த வெள்ளம்
சிற்பமாய் ஒளிகொண்டு உறைகின்ற நவ கோணம்
கற்குதே என்னுள்ளம் கருத்தாய்த் தெளிஞானம்
பொற்பாதமுந்தன் புறத்யானம் அகத்துள்ளே அகண்ட நின்தரிசனம்