20
மூலம்
உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ?- பூரணாசல மங்கலையே.
எளிய தமிழில்
தரிசனம் இடப்பாகம் தாங்கியே மங்கலமாய் எந்தையுடன்
கரிசனமாய்க் காட்சி தரும் நால்வேத மூல ஓங்காரமோநீ
சரிசமமாய் நால்வேத முடிவின் முடியான உபநிஷதமோ
நிறையமுத நிலவின் பூரண வெண்மை மண்டலமோ
புரிசப்தம் பொருள்நிறை பாற்கடலோ என் நெஞ்சமோ