23
மூலம்
கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே.
எளிய தமிழில்
கொள்ளேன் திருவாய் நின்னுருவன்றி வேறுருவம்
நினையேன் நின்தேஜோமய வடிவன்றி ஓர்வடிவம்
அடியேன் நின்சாக்தம் விட்டோர் மதம்விரும்பேன்
மண்விண் பாதாளம் உள்வெளி நிறைதாயே
என்மனம் களிகொள் ஆனந்தக் கண்மணியே