15
மூலம்
தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?-
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.
எளிய தமிழில்
திருவருளே இனிய சொல் பசுங்கிளி இன்னிசை விருந்தே
திருவருள் நாடியுனைப் பாட மண்ணளிக்கும் செல்வமும்
இந்திராதி தேவர்தம் ஸ்வர்க்க லோகச் செல்வம்பலவும்
விண்ணளிக்கும் சங்கநிதி பதுமநிதி கற்பகவ்ருக்ஷமும்கூடும்
அழியாப் பிறப்பொடு சாயுஜ்ய பதவியளிப்பாயே பைங்கிளியே