26
மூலம்
ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம்,- கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே.- மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடைத்தே.
எளிய தமிழில்
தொழுதுனைப் பெருமையாய் சித்திபெற் றடியார் மூவர்
ஈரேழுலகும் படைத்துக் காத்து மழித்தருளி உலவ
கமழுமணங் கடம்பமலரணி கேசபார மணங்கே தாயே
மகிழுமணம் வீசும் நின்னெழில் பொற்பாத மதை
அமிழுமென் மனவார்த்தை நகைப்புக் குரித்ததே