28
மூலம்
சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.
எளிய தமிழில்
சொல்வதுவும் பொருள் கொள்வதுவும் நீக்கமற
இணைந்ததுவும் நீயே எந்தையுடன் நிலை பெறக்
கலந்ததுவும் அல்லும் பகலும் அடியார் நெஞ்சு
நிறைந்தவுன் செந்தாமரை பாதம் செல்வமும்
செறிந்த தவநெறியும் சிவபதமும் சித்திக்குமே