29
மூலம்
சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.
எளிய தமிழில்
நீயேயன்றோ பாவியெனைத் தடுத் தாட்கொண்டாய்
நீயேயன்றோ நானினி கடல்வீழினு மாட்கொள்வாய்
நீயேயன்றோ இச்சை கொண்டு பல்லுருக் கொண்டாய்
நீயேயன்றோ யெனையினிக் கரையேற்றும் திருக்கொண்டாய்
நீயேயன்றோ ஒன்றேபலவே உருவேயருவேயென் உமையே