34
மூலம்
வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்–சதுர்முகமும்,
பைந் தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற்
செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே.
எளிய தமிழில்
வந்து சரணம் புகுமுன் அடியார்க்கு முக்தியை
ஈந்து பரிவுடன் பிரம்மனின் நால் முகத்திலும்
சிந்து தேன்மலர் மாலையணி மால் மார்பிலும்
இடம் கொண்ட சிவனுடை தேகத்திலும் விரிகிரண
சூரிய சந்திர மண்டலமு முறைந்தே அருள்வாய்