36
மூலம்
பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.
எளிய தமிழில்
பொருளே பொருள்பல தரும் ஐஸ்வர்ய ரூபிணியே
பொருள் தரும் போகமும் நீயே போக மாயைநீக்கும்
அருள் நீயே சுகித்த மாயை நீக்கித் தெளிவளித்து
இருள் நீக்கி ஞான ஒளி வீசும் பேரருள் சக்தியும் நீயே
திருவா யுனதருள் எத்துணை வியக்கின்றேன் அபிராமியே