4
மூலம்
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.
எளிய தமிழில்
மனிதர் தொடங்கி தேவர் முனிவர் வரை
மேன்மையாய் உயர்த்திடு முன்சேவடி
சடை மதி சர்ப்பம் கங்கை சூடியவுன்
மணாளனுடன் அவன் மங்கை நீயும்
சதா யென் சிந்தை யுறைவாய்