41
மூலம்
புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.
எளிய தமிழில்
புண்ணியமே செய்தோமே புவியில் யாம் பூங்குவளைக்
கண்ணியவள் நீஎந்தை சிவனுடன் சேரநின்றெமை உய்விக்கப்
பண்ணியமை கண்டு பேருற்றோம் களிப்புற்றோம் எம்
சென்னிதனில் நின்பாதம் படிந்திட யாம் வினையற்றோமிதை
எண்ணியே எம்நெஞ்சிலுன் பேரருள் பதித்திட்டோம்