43
மூலம்
பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச்சிலைக் கை,
எரி புரை மேனி, இறைவர் செம்பாகத்து இருந்தவளே.
எளிய தமிழில்
சிலம்பணி சீரிய சிறு திருவடி பாசாங்குசம் தாங்கி
பஞ்சபாணி தரிஇன்சொல் செம்மேனி திரிபுர சுந்தரி
தீமைபுரி உளங்கொள் தீயசுரர் அஞ்ச மேருமலை வளைத்
திருக்கரத்தான் தீத்தழல் திருமேனியன் எந்தை சிவனவன்
செம்பாகத்து எழுந்தருளுமென் அன்னையே அபிராமியே