44
மூலம்
தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்,
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே.
எளிய தமிழில்
அன்னையே அபிராமியே எங்கள் சங்கரனார் மனைமங்கலமே
அன்னையும் நீயே எந்தைக்கு மானதனால் இறைக்கெல்லா மிறையென
உண்மையாய் நீயிருக்க உனக்கு மேலு மொருவருண்டோ
இறைவியுனக்குத் தொண்டு புரியு மருஞ்செயல் விட்டு நான்
ஏனையோருக்குச் செய்கிலேனோர் வழிபாடு