45
மூலம்
தொண்டு செய்யாதுநின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப் பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே.
எளிய தமிழில்
வழிபடாதுனை முறையாய் வணங்காதுன் திருவடிதனை சதாசர்வம்
தவத்துணையால் சமாதிநிலை முக்தர்செய் சதாகால வழிபாடாய்
நினைந்துனை நடப்பதே சரியை செய்வதே கிரியை ஸ்வாஸமாய்
வாழ்ந்துனை நினை முக்தர்வழியே நான் செல்ல என்தரம் தள்ளாதே
உன்துணையே யென்கதியா யெண்ணுமெனை வெறுக்காதே