47
மூலம்
வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்
ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.
எளிய தமிழில்
வாழும்வழி ஒன்று கண்டுகொண்டேன் மனதிலதே
நினையவு மியலா சொல்லவு மியலாப் பேரின்பமாய்
ஏழுலகும் எண்மலையும் எட்டவொண்ணாத் தொலைவுப்
பெருஞ்சுடராய் சூரிய சந்திர நடுத்திகழ்ப் பேரொளியாய்
பேரானந்தமாய்க் கண்டேனே உன் சுடரொளியை