49
மூலம்
குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்–
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே.
எளிய தமிழில்
கருவறைப் பிணியா யுடல் சிறைப்படு மென்னுயிர் காலன்
என்முறை விதி வரும்வரை சுழன்று தவித்தே மறுக வுன்
கைவளை முத்திரை யபயங் காட்டி அஞ்சேல் என்றே
அரம்பையர் பரிவாரஞ்சூழ வந்து காத்திடு கருணையாய்
யாழிசை மீட்டியே சிவசக்தி நாயகியே