55
மூலம்
மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள், அகம் மகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு
முன்னாய், நடு எங்கும் ஆய், முடிவு ஆய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே.
எளிய தமிழில்
மின்னல் ஆயிரம் துலங்கொளி நின்திரு மெய்யாய்த் திகழ்
கன்னல் மொழியுடையாள் அகமகிழ் ஆனந்தவல்லி நின்பதமே
முன்னதாய் நடுவாய் எங்கணுமாய் முடிவாய்ப் பரவிப் பரந்து
வேதமதன் வேராய்த் தண்டாய்க் கிளையாய் யாதுமாகிநின்ற
உன்பதம் நான்தொழு தொன்று உனக்கா வதில்லையே