6
மூலம்
சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.-
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.
எளிய தமிழில்
சிரம்மீது நிறைந்தவுன் செம்பாதத் தாமரை
மனம்மீதும் வவ்வியதே மந்திரமாய்த் திருநாமம்
எவ்விடமும் த்யானிக்குமுன் அடியார் சகிதம்
என்மனமும் தோய்ந்ததே உன்நாம ஸாகரம்
எந்நாளும் சூடிடுவேனுன் திருவடித் தாமரை