61
மூலம்
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.–
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே.
எளிய தமிழில்
நாயேனையு மொரு பொருட்டாய் நயந்தே நின்னருளுக்குப்
பொருளாய்த் திருவுள்ளங் கொண்டே வலியவே நீயுமெனையென்
நினைவின்றியே ஆட்கொண்டாய் உன்னை உள்ளபடியே அறிய
பேதையெனக்குமே அறியு மறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலையரசியே தாமரைக்கண் திருமாலின் அழகுத் தங்கையே