62
மூலம்
தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே.
எளிய தமிழில்
தங்க மய மேருதனை வில்லாய்த் தரித்து அசுரர் முப்புர மெரித்து
வெங்கண் மத யானை தோலுரித்துப் போர்த்திய சிவந்த எந்தை
சிவனவன் திருமேனி குறிகொண்டதே அம்மே உன் நகில்குரும்பே
அன்னையுன் செந்திருக் கரமேந்திய கரும்புவில்லும் மலரம்பும்
இத்துணையாவுமே செறிந்தே வசிக்கு மென் சிந்தையிலே