63
மூலம்
தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக்
கூறும் பொருள், குன்றில் கொட்டும் தறி குறிக்கும்–சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்,
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே.
எளிய தமிழில்
சிந்தையிலே காணாபத்யம் சைவம் சாக்தம் வைணவ கௌமார சௌர
சீரியதலை வியிவளே என்றறிந்தும் பிறிதொரு சமயம் பற்றும் அறிவிலிகாள்
அவர்தலை குன்றின்மேலடி மரக்கட்டையடி வியர்த்தமாம் அவருக் கறிவுரை
இவள்தலை வியே இவளன்றி யொருதலைவி யெவருமிலை யென்றே
என்தலை அபிராமியே உன்பாதம் வைத்தே னென்னன்பை உனக்கே