64
மூலம்
வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப்
பேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.
எளிய தமிழில்
உனை விட்டு வீணே உயிர்ப்பலிகொள் பல தெய்வங்கள்பாற் சேரேன்
எனை யாளுமுன் அரும்புகழன்றி வேறொருவர் புகழ் சற்றும் விரும்பேன்
துணை யாய்ப் பாலூட்டுந் தாயாய் நீயிருக்க சேயாய் நானுனைப் பிரியேன்
இணை யுனக்குத்தான் இனி யொருவருண்டோ இனியவளே உயர்ந்தவளே
தனை யேயொளியாய் நிறைத்தாயே திசைநான்கும் மண்ணிலும் விண்ணிலும்