66
மூலம்
வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செய்
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன், பசும் பொற் பொருப்பு–
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய். வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும், நின் திரு நாமங்கள் தோத்திரமே.
எளிய தமிழில்
உன்னாற்றல் யாதொன்று மறியேன் நான் சிறியேன் ஆயினும்
உன்செந்திருவடி தளிரன்றி வேறு பற்றொன்று இலேன் எந்தை
பொன்மயமேரு பசுமலைதனை வில்லாய்க் கொண்ட சிவனவன்
உடனமர் அபிராமி அன்னையே தீவினையுடை யடியேன் தொடுத்த
அந்தாதி பாமாலை பலவும் அவமாயினும் நின் திருநாமமே