68
மூலம்
பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே
சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே.
எளிய தமிழில்
செல்வமாய் நிலமும் நீரும் நெருப்பும் வேகமாய்க் காற்றும்
பெரும்பரப்பாய் ஆகாசமும் இவையாவிலும் படர் மணமாய்
வியாபகமாய் சுவை ரஸம் பிரகாசம் ஸ்பர்சம் ஓசை இரண்டறக்
கலந்தொளிர் இன்புறு தேவியே பரமேஸ்வரியே சிவகாமசுந்தரியே
நின்திருவடிக் கண்ணே சார்ந்தேன் தனமே உனையே