72
மூலம்
எங்குறை தீரநின்று ஏற்றுகின்றேன், இனி யான் பிறக்கில்,
நின் குறையே அன்றி யார் குறை காண்?-இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்.-
தன் குறை தீர, எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே.
எளிய தமிழில்
இனிகுறை எனக்கேது யென்றேயுனை மனமாரத் துதித்தே தொழுகின்றேன்
உன்குறையே இனியாவும் ஒருகால் நானினிப் பிறந்தால் என்பிழை யன்றே
அகன்றுயர் வான்கண் மின்னலினு மொடுங்கிய திருவிடை மெல்லியலாளே
நின்நூடல் தீர்க்கவே எம்பிரான்தன் செஞ்சடை வைத் துதித்த நின்மலர்ச்
செம்பாதம் என்குறை தீர்க்கவே நெஞ்சாரத் துதிப்பேனே