"

74

மூலம்

நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,
அயனும் பரவும் அபிராம வல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

 

எளிய தமிழில்

 

முக்கண்ணனாம் எந்தையும் அயனும் மாலும் வேதமும் போற்றிக்
கண்ணெனப் பணியுமென் அபிராமவல்லியவள் பொற் திருவடியே
முக்திப்பயனென த்யானிக்கு மடியார் நடன அரம்பையர் பாவையர்
பொன்மஞ்சமதில் ஆடல் பாடல் களியாட்டம்தான் பொருந்துவரோ
பொன்னிறக் கற்பகச் சோலைதான் இந்திரராய்த் தங்குவரோ

 

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அபிராமி அந்தாதி – எளிய தமிழில் Copyright © 2014 by ஜவஹர் கண்ணன், படங்கள் – ஓவியர் கேஷவ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.