75
மூலம்
தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி
மங்குவர், மண்ணில் வழுவாய் பிறவியை,-மால் வரையும்,
பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.
எளிய தமிழில்
தங்குவரோ இனியொரு தாய் வயிற்றில் உன்னுதரமுதித்த
ஈரேழு புவனம் எண்திசை பெருமலை எழுகடல் தியானிக்க
நறுமண பூங்குழல் பொருந்து முன்திரு வதனஎழில்தனை
மனமதில் பூஜிக்க அடியாருக் கொரு குறைதானுண்டோ
அவரெண்ணம் அபிராமி உன்திருவுருவங் குறித்தே