77
மூலம்
பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி–என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.
எளிய தமிழில்
பைரவசக்தியே சதாசிவசக்தியே பாசாங்குசம் தரிதேவி ஐமலரம்புடையாள்
வஞ்சர் உயிரவி சண்டிதேவி கரிய காளிதேவி ஒளிர்கலை வைரஆபரணமணிதேவி
குண்டலினிதேவி அக்ஷர மாலினி சூலினி வாராஹி நான்மறைசேர் திருநாமமாயிரம்
எண்ணிலடங்கா அடியார் நாவினிக்க மனம்செழிக்கச் செப்புவரே