79
மூலம்
விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?
எளிய தமிழில்
உன்விழி யிலென்று மெனக்கருளுண்டு வேத மார்க்கமாய் உனைப் பூஜிக்க
இன்வழி யாயெனக்கே மனமுண்டு இவ்வழி மார்க்கம் என்வழி நிறக்க
இழிவழி கீழ்க்கடை மனிதரோ டெனக்கென்ன கூட்டு இனிய அபிராமிவல்லியே
உன்மொழி பேசுவார் உன்நாமம் உருகுவார் உன்புகழ் பாடுவார் அவர்தம்
பெருவழியே என்னுயிர் வழிபடும் இனிய பெருவொளி சேர்க்கையே
*இப்பாடல் அபிராமி அந்தாதியின் மகுடம். இப்பாடல் பட்டர் *
பாடியவுடன் அன்னை தன் தாடங்கத்தால் நிலவு கொணர்ந்தாள்