80
மூலம்
கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
ஓட்டியவா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம்–ஆடகத் தாமரை ஆரணங்கே.
எளிய தமிழில்
ஒளிவழி வானில் துலங்குதே உன்தாடங்கம் விண்ணில்நீ வீசவே என்மனம்
பேரொளி சேர்க்கையாய்த் துலங்குதே அன்னையே உன் சிவசக்தி ரூபமே
பெருவழி பேரொளியாய்ப் பிணைத்தனையே யெனையுமுன் பக்தர் குழாம்
உன்னொளி அருள்வடிவு கண்டே கண்ணும் மனமும் கற்கண்டா யினிக்குதே
என்வழி கண்டுன் நடம் ஆடியென்வினை நீக்கிய தாமரை ஆரணங்கே *
*அன்னை நிலவு கொணர்ந்ததும் அபிராமி பட்டர் அருள்மழையில்
திளைத்துப் பாடிய அத்புதப் பாடல் இது