81
மூலம்
அணங்கே.-அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்,
வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோடு
இணங்கேன், எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன், அறிவு ஒன்று இலேன், என்கண் நீ வைத்தபேர் அளியே.
எளிய தமிழில்
ஆரணங்கே அபிராமி அணங்குகள் உன்னற்புதப் பரிவாரமாய்க் கண்ணாரக் கண்டபின்
வணங்கிடுவேனோ வேறெவரையும் வாழ்த்திடுவேனோ பிறிதொரு தெய்வம்
இணங்கிடுவேனோ தன்னலமே தலையாயக் குடி கொண்டோர்தமை
சுணங்கிடுவேனோ தன்னுடமை நின்னுடை அபிமானங் கொண்ட அடியார்தமை
உணர்ந்திடுவேனே அறிவற்ற நான் என்பால் நீகொண்ட கருணை.