86
மூலம்
மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு–கதித்த கப்பு
வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.
எளிய தமிழில்
துடைக்கும் கொடுங் காலன் முக்கிளையாம் திரிசூலமேவுகையில்
தேடிக்காண அயன்மால் மறைவானவர் முயன்று மியலாதவுன்
திருப்பாதம் நின்வளைக் கரசகிதம் என்முன்தோன்றக் கடவாய்
வளைக்கரமா யுன்னோசை என்செவி தெள்ளமிர்தமாம் ஆறுதலாம்
பால்தேன் பாகொத்த என்னன்னையே இன்மொழியாளே