9
மூலம்
கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.
எளிய தமிழில்
உள்ளங்கவர்வே எந்தை சிவன் முன்தோன்றும்
ஞானசம்பந்தர்க்குப் பால் ஈந்த பெருத்தவுன்
கூர்திருத்தன பாரமும் முத்துமாலையும் செங்கை
தாங்குமுன் கரும்புவில்லும் புஷ்ப பாணங்களும்
வெண்மைச் சிரிப்புமென் முன்னால் தோன்றவே