1
மூலம்
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே
எளிய தமிழில்
உதயக்கதிராய் சிவந்த நெற்றியில்
இதயங்கவர் உச்சிச்சிந்தூரம் சிவக்க
மனமகிழும் மாணிக்கம் ஜொலிக்க
கொடிமேனி குங்குமமாய்க் கனியும்
அன்னை அபிராமியே என்துணை