"

41

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் தரம் குறைந்தால் வரும் நோய்க்கு பெயர் சர்க்கரை நோய். கால்சியத்தின் தரம் குறைந்தால் எலும்புகளில் நோய் ஏற்படும். கால்சியம், சோடியம், அயோடின் மற்றும் பல பொருள்களில் தரம் குறைந்தால் வரும் நோய்க்குப் பெயர் தைராய்டு நோய். கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருள்களின் தரம் குறைந்தால் வரும் நோய்கள் கொழுப்புக் கட்டி, இரத்த அழுத்தம், இருதயத்தில் அடைப்பு மற்றும் கொழுப்பு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும், இவைகளைப் பற்றி ஏற்கனவே பார்த்து விட்டோம்.

இதேபோல் இரத்தத்தில் வைட்டமின் ன் தரம் குறைந்து போனால் கண்ணில் நோய் ஏற்படும். ஏனென்றால் கண் சாப்பிடும் உணவு வைட்டமின் . உடனே வைட்டமின் ன் தரம் குறைந்தால் கண் மட்டும்தான் கெட்டுப்போகும். கண்ணில் மட்டும்தான் நோய் வரும் என்று இருந்து விடக்கூடாது. வைட்டமின் இரத்தத்தில் தரம் குறைந்தால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நோய் வரும். ஏனென்றால் அனைத்து உறுப்புகளுக்கும் வைட்டமின் தேவைப்படுகிறது. ஆனால் கண்கள் மட்டும் சற்று அளவு அதிகமாக வைட்டமின் வை எடுத்துக் கொள்ளுகிறது. எனவே, நோய் முதலில் கண்ணில் தெரியும்.

இரத்தத்தில் உள்ள வைட்டமின் னுன் தரம் குறைந்து போனால் எலும்புகளில் நோய் ஏற்படும். ஏனென்றால் எலும்பு சாப்பிடும் உணவுக்குப் பெயர் வைட்டமின் னு. மூட்டு வலி, முழங்கால் வலி, மூட்டு வாதம் (ஹசவாசவைiஉள) போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் அடிப்படைக் காரணம் இரத்தத்தில் வைட்டமின் னுன் தரம் குறைந்து போவதே. எனவே, எலும்புகளில் வலியும், வேதனையும் ஏற்படும் பொழுது முதுகெலும்பு ஆபரேசன் (டீயீநசயவiடிn) மூட்டு எலும்பு ஆபரேசன் (டீயீநசயவiடிn) என்றும், அவைகளில் மருந்து தடவியும் வித்தை செய்தும் எந்த நல்லதும் நடக்காது. இரத்தத்தில் உள்ள வைட்டமின் னுன் தரத்தை உயர்த்துவது மூலமாக மட்டுமே எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும், உடனே வைட்டமின் னுகெட்டுப் போனால் எலும்பில் மட்டும்தான் நோய் வரும் என்று தவறாக நினைத்து விடக்கூடாது. வைட்டமின் னுஉடல் முழுவதும் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் தேவைப்படுகிறது. ஆனால், எலும்புகளில்தான் அதிகமாக தேவைப்படுகிறது என்பதால் எலும்பு முதலில் கெட்டுப் போகிறது.

இரத்தத்தில் வைட்டமின் க்ஷன் தரம் குறைவதால் தசை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் வரும். ஏனென்றால் தசைகள் சாப்பிடும் உணவிற்கு பெயர் வைட்டமின் க்ஷ. உடம்பு வலிக்கிறது, சோர்வாக இருக்கிறது, குத்துகிறது, குடைகிறது, எரிச்சல் ஏற்படுகிறது ஆகிய அனைத்து சதை சம்பந்தப்பட்ட நோய்க்கும் அடிப்படைக் காரணம் இரத்தத்தில் வைட்டமின் க்ஷன் தரம் குறைவதே. எனவே, இரத்தத்தில் உள்ள வைட்டமின் க்ஷன் தரத்தை உயர்த்துவதன் மூலமாக தசை சம்பந்தப் பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்.

வைட்டமின் மு என்ற சத்துப் பொருளின் தரம் குறைந்தால் இரத்தம் உறையும் தன்மையை இழந்து விடும். பொதுவாக நமது உடலில் ஏதாவது காயங்கள் ஏற்பட்டால் இரத்தம் வெளியே வந்தவுடன் இரத்தம் உறைந்து விடும். எனவே, நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். ஆனால் இரத்தத்தில் வைட்டமின் மு ன் தரம் குறைவதால் இரத்தம் உறையாது. எனவே, அதிக இரத்தம் வெளியே செல்வதன் மூலமாக உயிருக்குக் கூட ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இரத்தத்தில் உள்ள வைட்டமின் மு ன் தரத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலமாக இரத்தத்தை உறைய வைக்கலாம்.

இப்படி இரத்தத்தில் நிறைய பொருள்கள் உள்ளன. ஒவ்வொரு பொருளின் தரம் குறையும் பொழுதும் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் பாதிக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட உறுப்பு மட்டுமே சற்று அதிகமாக பாதிக்கும். இப்படி ஒவ்வொரு பொருளும் பாதிக்கும் பொழுதும் எந்தெந்த உறுப்பு பாதிக்கும் என்பதைப் பார்க்க நமக்கு இந்த புத்தகத்தில் இடம் போதாது. எனவே, நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒரு பொருளின் தரம் குறைந்தால் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளிலும் பாதிப்பு ஏற்படும். ஆனால், ஒரு குறிப்பிட்ட உறுப்பில் மட்டுமே பாதிப்பு அதிகமாக இருக்கும். ஏனென்றால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு பொருளை அதிகமாகச் சாப்பிடும். சில பொருளை குறைவாகச் சாப்பிடும். எனவே, நமது உடலில் ஒரு உறுப்பில் ஒரு நோய் வந்தால் அது அந்த உறுப்பிற்கும் நோய்க்கும் சம்பந்தம் கிடையாது என்பதைப் புரிந்து கொண்டு அந்தக் குறிப்பிட்ட உறுப்பு சாப்பிடும் ஒரு பொருள் இரத்தத்தில் கெட்டு விட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாகக் கண்ணில் நோய் வந்தால் கண்ணில் ஆராய்ச்சி செய்வதால் எந்தப் பிரயோஜனம் இல்லை. ஏனென்றால் கண்ணில் வரும் நோய்களுக்குக் கண் காரணமே இல்லை. கண்களுக்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போவதால் மட்டுமே கண்களில் நோய்வருகிறது. மூட்டுவலி என்பது மூட்டு சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. மூட்டில் உள்ள செல்களுக்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போவதே, மூட்டுவலிக்கு அடிப்படைக் காரணம். எனவே, உறுப்புகளில் நோய் கிடையாது. இரத்தத்தில் உள்ள ஒரு பொருளின் தரம் குறைவதே நோய் என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொண்டோம்.

ஒரு பெரிய பங்களா வீடு. எல்லா ஜன்னலும் கதவும் அடைத்து வைத்திருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த வீட்டின் உள்ளே தீப்பிடித்து எரிகிறது. நீங்கள் வெளியிலிருந்து வேடிக்கைப் பார்க்கிறீர்கள். உள்ளே எரியும் தீ உங்கள் கண்களுக்குத் தெரியாது.

அனைத்து ஜன்னலும் கதவும் நன்றாக அடைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு ஜன்னல் மட்டும் லேசாகத் திறந்திருக்கிறது. இப்பொழுது அந்த ஜன்னல் வழியாக லேசாகப் புகை வரும். ஜன்னலில் நோய் வந்து விட்டது புகை என்பதுதான் நோய் என்று யாராவது கூறினால் அதை நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா ஜன்னலில் நோய் கிடையாது. வீடு முழுவதும் பற்றி எறிவதுதான் நோய். புகை என்பது நோய் கிடையாது. புகை என்பது ஒரு அடையாள அறிகுறி எனவே நீங்கள் நேராக அந்த ஜன்னலை லேசாக அடைத்து வைப்பது மூலமாக புகையை வெளியில் வராமல் தடுக்கலாம். உடனே நீங்கள் இந்தப் பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று கூறமுடியுமா? இந்த உதாரணத்தைப் புரிந்து கொண்டால் உலக வைத்தியத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

உடல் முழுவதும் பற்றி எரியும் பொழுது, ஏதாவது ஒரு உறுப்பின் வலியாக புகைவரும். அதாவது ஏதாவது ஒரு உறுப்பில் வலி தெரியும். எந்த உறுப்பில் வலியோ, வேதனையோ அல்லது உபாதைகளோ ஏற்படுகிறதோ அந்த உறுப்பில் புகை வருகிறது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். உடல் முழுவதும் பற்றி எரியும் போது ஏதாவது உறுப்பு வழியாக அதாவது எந்த உறுப்பு அதிகமாக வீக்காக இருக்கிறதோ அந்த உறுப்பு வழியாகப் புகை என்ற வலி வெளியே வரும். எனவே, நமது தலை முடி முதல் உள்ளங்கால் வரை உடலிலுள்ள அனைத்து உறுப்புகளிலும் எப்பொழுது நோய் வந்தாலும், நாம் அந்த உறுப்பில் ஆராய்ச்சி செய்வதால் எந்தப் பயனும் கிடையாது. உடல் முழுவதும் பற்றி எரிகிறது. அதனால் அந்த உறுப்பில் புகை வருகிறது என்று புரிந்து கொண்டு உடல் முழுவதும் அணைப்பதற்கு வழியை தேட வேண்டுமே தவிர புகையை அணைப்பதற்கு அந்தக் குறிப்பிட்ட உறுப்பை நோக்கி செல்லக்கூடாது.

இப்படித்தான் உலக வைத்தியம் குறிப்பிட்ட இடத்தில் நோய் இருக்கிறது என்று அந்தப் புகையை அணைப்பதற்கே வாழ்க்கை முழுவதும் கண்ட்ரோல் (ஊடிவேசடிட) செய்கிறேன் என்று மருந்து, மாத்திரை கொடுக்கிறார்கள். ஆனால், உடல் முழுவதும் எரியும் அந்த நெருப்பை அணைப்பதற்கு எந்த வைத்தியமும் முயற்சி செய்வது கிடையாது.

எனவே, நம்மில் யாருக்காவது தலைவலி வந்தால் இனிமேல் தலையில் நோய் என்று கூறாதீர்கள். தலை என்ற ஜன்னலில் புகை என்ற வலி வந்திருக்கின்றது. ஆனால், இதற்கு தலை காரணமில்லை உடல் முழுவதும் நோய் இருப்பதால் தலை என்ற ஜன்னலில் புகை உள்ளது என்று கூறுங்கள். இதுதான் சரியான காரணம். பின்னர் உடல் முழுவதும் ஏற்படும் தீயை அதாவது நோயைக் குணப்படுத்துவதற்கு வழியைத் தேடுங்கள்.

கால்மூட்டில் வலி வந்தால் மூட்டு என்ற ஜன்னலில் புகை வருகிறது. உடல் முழுவதும் பற்றி எரிகிறது என்று புரிந்து கொள்ளுங்கள். அதாவது மூட்டு சாப்பிடும் ஒரு பொருள் இரத்தத்தில் கெட்டுப் போய் விட்டதால், உடல் முழுவதும் கெட்டுப் போய் விட்டது. ஆனால், மூட்டு அதிகமாக சாப்பிட்டதால் முதல் முதலில் அதற்கு நோய் வந்து விட்டது என்று புரிந்து கொள்ளுங்கள். இது போல் எந்த உறுப்பில் எந்த நோய் வந்தாலும் அந்த உறுப்பில் நோய் இல்லை அந்த உறுப்பில் புகை மட்டும்தான் வருகிறது என்று புரிந்து கொள்வதால், நம் உடலில் வரும் நோய்களை நமக்கு நாமே குணப்படுத்துவதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டு போவதால் நோய் வருகிறது. அதாவது இரத்தத்தில் ஒரு பொருள் தானாகக் கெட்டுப் போகாது. நமது பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாறுதல்களால் இரத்தத்திற்கு செல்லும் பொருள்கள் சரியாக ஜீரணம் ஆகாமல் இரத்தத்தில் கலப்பதே இந்த நோய்க்கு அடிப்படைக் காரணம். எனவே, ஒரு மனிதனுக்கு வரும் முதல் நோய் இரத்தத்திலுள்ள ஏதாவது ஒரு பொருளின் தரம் குறைவது, இந்த நோயை எளிமையான முறையில் இயற்கையான வழியில் எந்தவொரு மருந்து மாத்திரையுமில்லாமல் சுலபமாகக் குணப்படுத்துவது எப்படி என்பதை இந்த புத்தகத்தை முழுமையாக படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.