80
தினமும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் யோகா பயிற்சிகள்
செய்வதால் உடலுக்கு நல்லது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் யாருக்கும் அதற்கு சரியான நேரம் கிடைப்பதில்லை. இந்த அவசர காலத்தில் பயிற்சிகள் செய்வதற்கு நேரம் கிடைக்காததால் பலரும் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு செய்யாமல் இருக்கிறார்கள். எனவே இவர்களுக்காக ஒரு பயிற்சி உள்ளது. அதன் பெயர் அக ஒளி தியானம்.
உடற்பயிற்சிகள், ஆசனங்கள், சவாசனம், மூச்சுப் பயிற்சி, தியானம் ஆகிய ஐந்தும் ஒரு மணி நேரம் தொடர்ந்து செய்வதால் நமக்குக் கிடைக்கும் சக்தியையும், பலனையும், ஐந்தே நிமிடப் பயிற்சியில் எடுத்துக் கொள்வதற்கான அற்புதமான பயிற்சிதான் அக ஒளி தியானம். இந்தப் பயிற்சியைக் கற்றுக் கொண்டால் ஒரு நாளில் குறைந்தபட்சம் 5 நிமிடம் அதிகபட்சம் 15 நிமிடம் பயிற்சி செய்தால் போதும். நமக்குப் பல மணி நேரம் பயிற்சி செய்த பலன் கிடைக்கும். இந்த பயிற்சியை நாம் ஒரு குருநாதரிடம் கற்றுக் கொண்டோம். இந்த எளிமையான குறைந்த நேரத்தில் அதிக சக்தியைப் பெறக் கூடிய அக ஒளி தியானம் என்ற பயிற்சியை விரைவில் உலக மக்களுக்கு கற்றுக் கொடுக்க உள்ளோம். எனவே காத்திருங்கள் அந்த பயிற்சியை ஆரம்பிக்கும் பொழுது உங்களுக்கு தகவல் வரும்.