தயவு செய்து இந்த புத்தகத்தை ஆரம்பம் முதல் கடைசி வரை பொறுமையாக ஒவ்வொரு பக்கமாக படித்தல் வேண்டும். பலர் தனக்கு ஒரு நோய் இருந்தால் அந்த நோயை பற்றி எந்த பக்கத்தில் எழுதியிருக்கிறார்கள் என்று நேரடியாக அந்த பக்கத்திற்கு சென்று படித்தால் அவர்களுக்கு புரிதல் குறைவாகவே இருக்கும். இந்த புத்தகத்தை ஒவ்வொரு பக்கமாக படித்தால் மட்டுமே புரியும். அரை குறையாக நடுவில் நடுவில் மட்டுமே படித்து விட்டு தயவு செய்து யாரும் இந்த புத்தகத்தைப் பற்றி உங்கள் கருத்துகளை கூற வேண்டாம். இந்த புத்தகத்தை பற்றி எந்த கருத்தை யார் கூறினாலும் முதல் கேள்வி நீங்கள் இந்த புத்தகத்தை முழுவதுமாக படித்துவிட்டீர்களா என்பதாக மட்டுமே இருக்கும். எனவே ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகவே இருக்கும் ஒரு 20 அல்லது 50 பக்கங்கள் முதலில் படித்து விட்டால் பிறகு உங்களுக்கே முழுவதுமாக படிக்க தோன்றும்.