30
உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் உணவு சம்பந்தப்பட்ட குறையைத் தீர்ப்பதன் மூலமாக கல்லீரலைக் குணப்படுத்தலாம். உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் நீர் சம்பந்தப்பட்ட குறையைத் தீர்ப்பதன் மூலமாக மட்டுமே சிறுநீரகத்தைக் குணப்படுத்த முடியும். உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் காற்று சம்பந்தப்பட்ட குறையைத் தீர்ப்பதன் மூலமாக மட்டுமே நுரையீரலில் வரும் அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும். உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் நோயைக் குணப்படுத்து வதன் மூலமாக மட்டுமே இரத்த அழுத்தம் என்ற விஷயத்தை சரி செய்ய முடியும்.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், தனித்தனி
உறுப்புகளுக்குத் தனித்தனி சிகிச்சை கிடையாது. இருதயத்தில் ஒரு நோய் வந்தால் இருதயத்தில் மட்டும் °கேன் செய்து அதற்கு சிகிச்சை கொடுக்க முடியாது. ஏனென்றால் இருதயத்திற்குத் தேவையான உணவு கல்லீரல் கொடுக்கிறது. கல்லீரலில் ஒரு குறை என்றால் இருதயம் ஒழுங்கா வேலை செய்யாது. இருதயத்திற்குத் தேவையான நீர் சிறுநீரகம் கொடுக்கிறது. அப்பொழுது சிறுநீரகத்தில் ஏதாவது நோய் என்றால் இருதயத்தில் பாதிப்பு ஏற்படும். இருதயத்திற்கு தேவையான காற்றை நுரையீரல் கொடுக்கிறது. நுரையீரலுக்கு ஏதாவது நோய் என்றால் இருதயம் கெட்டுப் போகும் இப்படி நம் உடம்பில் அனைத்து உறுப்புகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒன்று சேர்ந்து கூட்டாகத்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இப்படி எந்த உறுப்பில் நோய் வந்தாலும் அந்த உறுப்பை மட்டுமே °கேன் செய்து ஆபரேஷன் செய்து மருந்து மாத்திரை சாப்பிட்டு, அதைப் பற்றிக் கவலைப்பட்டால் மட்டும் குணப்படுத்த முடியாது. உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் உள்ள நோயைக் குணப்படுத்துவதன் மூலமாக மட்டுமே உடம்பிலுள்ள சிறு சிறு உறுப்புகளையும் சரி செய்ய முடியும். இந்த உண்மையைப் புரிந்து கொண்டு நீங்கள் தயவு செய்து இனி தனித்தனி உறுப்புகளுக்குத் தனித்தனி மருத்துவத்தை தேடாதீர்கள்.