43
நமது உடலில் ஒவ்வொரு வருடைய வயது, உயரம், எடை ஆகிய மூன்றையும் பொருத்து இரத்திற்கு ஒரு அளவு உண்டு. இந்த இரத்தத்தின் அளவு குறைந்தால் இது மூன்றாம் நிலை நோய்.
இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப்போனால் முதல்நிலை நோய். இதற்கு தவறான வைத்தியத்தை பயன்படுத்தி கன்ட்ரோல் செய்தால் இரண்டாம் நிலை நோயான இரத்தத்தில் ஒரு பொருள் குறைவதற்கும், இல்லாமல் போவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டு இரண்டாம் நிலைக்குதள்ளப்படு கிறோம். இந்த இரண்டாம் நிலை நோய்க்கும் தவறான வைத்தியம் செய்யும்பொழுது மூன்றாவது நிலை நோயான இரத்தத்தின் அளவு குறையும் நோய் ஏற்படுகிறது.
நமது உடலின் இரத்தத்தின் அளவு குறைவதற்குக் காரணம் என்ன? முதலில் இரத்தம் எப்படி ஊறுகிறது என்பதை பார்ப்போம். எலும்பு மஜ்ஜை இரத்தத்தில் உள்ள பல பொருட்களை எடுத்து புது இரத்தத்தை ஊற வைக்கிறது. எனவே நமது இரத்தத்தில் சில பொருள்கள் தரம் குறைந்த நிலையிலும், சில பொருள்கள் இல்லாத நிலையில் இருக்கும் பொழுது எலும்பு மஜ்ஜைக்கு புது ரத்தம் ஊறுவதற்குத் தேவையான பொருள்கள் கிடைக்காததால் ரத்தம் ஊறுவதை அது நிறுத்தி வைக்கிறது. எனவே ரத்தத்தின் அளவு குறைகிறது.
ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் பணியாளருக்கு அவருக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் சரியான அளவும் தேவையான நேரத்திலும் கொடுத்தால் மட்டுமே அவர் பணிகளை ஒழுங்காகச் செய்வார். அவர் வேலைக்குத் தேவையான சில பொருள்களைத் தரம் குறைந்த பொருளாகவே அல்லது கொடுக்காமல் இருந்தால் அவர் வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருப்பார். அதைப் போல எலும்பு மஜ்ஜைகளுக்கு புது இரத்தம் ஊறுவதற்கு என்னென்ன பொருள்கள் தேவைபடுகிறதோ அந்த பொருள்கள் அனைத்தும் இரத்தத்தில் சரியான அளவாகவும், சரியான தரத்துடன் இருக்கும்போது மட்டுமே இரத்தம் தினமும் ஊறிக்கொண்டே இருக்கும். நமது இரத்தத்தில் சில பொருள்கள் கேட்டுப்போய், சில பொருள்கள் இல்லாமல் போய், சில பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டால், எலும்பு மஜ்ஜை என்ற தொழிலாளி அவருக்குத்தேவையான பொருள்கள் கிடைக்காததால் அவர் வேலை செய்வதை நிறுத்துகிறார். இப்படி எலும்பு மஜ்ஜைகள் இரத்தம் ஊறுவதை நிறுத்தும் பொழுது இரத்தத்தின் அளவு குறைகிறது. இதற்கு இரத்த சோகை என்றும், அனிமிக் என்றும், `ஹீமோகுளோபின் குறைவு என்றும் கூறுவார்கள்.
இரத்தத்தில் ஒருபொருளின் தரம் குறையும் முதல் நிலை நோயும், இரத்தத்தில் சில பொருள்களின் அளவும் குறைந்து போதல் மற்றும் இல்லாமல் போதல் என்ற இரண்டாவது நிலை நோயும், வந்து இந்த இரண்டு நிலை நோய்களுக்கும் சரியான மருத்துவத்தை பயன்படுத்தாமல் தவறான மருத்துவத்தை பயன்படுத்துவதால்தான் மூன்றாவது நிலை நோயான இரத்தத்தின் அளவு குறையும் நோய் என்று வருவதற்கு அடிப்படைக் காரணம். எப்பொழுது இரத்தத்தின் அளவு குறைகிறதோ? உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் போதுமான இரத்தம் கிடைக்காதால் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும். எனவே நமது சிகிச்சையில் இரத்தத்தின் அளவை ஒழுங்காக, அளவாக வைத்துக் கெள்வது எப்படி என்பதை நாம் சுலபமாக கற்றுக் கொள்ள போகிறோம். இதன் மூலமாக நாம் மூன்றாம் நிலை நோய்களையும் நாம் சுலபமாக குணப்படுத்தலாம்.