"

31

சர்க்கரை நோய் பல பேருக்கு இருக்கிறது. சில நபர்களுக்கு சர்க்கரை நோய் இருக்காது. சர்க்கரை நோயில்லாதவர்கள் இதைப் படிக்க வேண்டாமென முடிவுக்கு வந்து விடாதீர்கள். இப்பொழுது உங்களுக்கு சர்க்கரை நோயில்லை. எப்படியும், எங்கேயாவது இலவச சர்க்கரை விழிப்புணர்வு முகாம் என்பதைப் பார்க்க

வாய்ப்புள்ளது. நீங்கள் அதில் டெ°ட் செய்து பார்க்கும் பொழுது அன்று முதல் நீங்கள் சர்க்கரை நோயாளியாக்கப் படுவீர்கள். எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்களும், இல்லாதவர்களும் தயவு செய்து இதை முழுவதுமாகப் படியுங்கள்.

நம் உடல் பல கோடிக்கணக்கான செல்களால் உருவாக்கப்பட்டது. பல லட்சம் கிலோ மீட்டர் தூரம் உள்ள இரத்த நாளங்களும் உள்ளது. ஒவ்வொரு செல்லும் ஒரு வீடு போல. இரத்தம் ஒரு ரோடு போல உள்ளது. நாம் சாப்பிடுகிற உணவில் உள்ள சத்துப் பொருட்கள் சிறு குடலில் ஜீரணமாகி கல்லீரல் மூலமாக இரத்தத்தில் கலக்கின்றன. சாப்பிடுகிற உணவில் மாவுச் சத்து, புரதச் சத்து, நார்ச் சத்து, உயிர் சத்து, தாதுப் பொருட்கள் விட்டமின்கள் உள்ளன. இந்த மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்), சர்க்கரையாக மாறுகிறது. சர்க்கரை, சுகர், குளுக்கோ°, இந்த மூன்றுக்கும் ஒரே அர்த்தம்தான். ஒரு வேளை, இந்தப் புத்தகத்தில் சர்க்கரை, சுகர், குளுக்கோ° என்ற வார்த்தைகள் மாறி மாறி வந்தாலும் இது மூன்றுக்கும் ஒரே அர்த்தமென்பதை நினைவில் வைத்துக் கொண்டு படியுங்கள்.

சர்க்கரையென்பது தமிழில் சொல்வது, சுகர் என்பது ஆங்கிலத்தில் சொல்வது, குளுக்கோ° என்பது மருத்துவர்கள் சொல்லும் பெயர். இதுதான் இந்த மூன்றுக்கும் வித்தியாசம். செல் என்ற வீடு கதவை திறந்து இரத்தத்திலுள்ள சத்துப் பொருட்களைத் தன் தேவைக்காக எடுத்துக் கொள்கிறது. ஒரு செல் கால்சியம், அயன், சோடியம், மக்னீசியம் போன்ற எல்லாப் பொருட்களையும் உள்ளே சுலபமாக எடுத்துக் கொள்ளும். ஆனால், சர்க்கரையை மட்டும் நேரடியாக எடுத்துக் கொள்ளாது. செல்கள் சாக்கரையை எடுப்பதற்கு முன்பாக அந்த சர்க்கரை நல்ல சர்க்கரையா? கெட்ட சர்க்கரையா? என்று ஆராய்ச்சி செய்யும். சர்க்கரையில் இரண்டு வகையுண்டு.

நல்ல சர்க்கரை, மற்றொன்று கெட்ட சர்க்கரை. உணவிலுள்ள மாவுச் சத்து வாயிலே, வயிற்றிலே, சிறுகுடலிலே ஒழுங்காக ஜீரணம் செய்தால் கிடைப்பது நல்ல சர்க்கரை. ஒழுங்காக ஜீரணமாகாமல் அரைகுறையாக ஜீரணமாகி வரும் சர்க்கரை கெட்ட சர்க்கரை. நல்ல சர்க்கரையென்பது தரமான சர்க்கரை. கெட்ட சர்க்கரையென்பது தரம் குறைந்த சர்க்கரை. நம் அனைவருக்கும் புரிவதற்காக கெட்ட, நல்ல என்ற வார்த்தைகள் பயன்படுத்துகிறோம். நல்ல சர்க்கரையென்பது வீரியம் அதிகமுள்ள சர்க்கரை. கெட்ட சர்க்கரையென்பது வீரியம் குறைந்த சர்க்கரையென்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு செல் கதவைத் திறந்து இரத்தத்தில் சர்க்கரையை எடுத்து இது ஒழுங்காக ஜீரணமான வீரியமுள்ள நல்ல சர்க்கரையா? அல்லது ஒழுங்காக ஜீரணமாகாத அரைகுறை ஜீரணமான வீரியம் குறைந்த கெட்ட சர்க்கரையா? என்று சோதனை செய்யும். செல் சர்க்கரையிடம் நீ நல்லவனா? கெட்டவனா? என்று கேட்கும். நம்மிடம் யாராவது நீ நல்லவனா அல்லது கெட்டவனாயென்று கேட்டால் என்ன பதில் சொல்வோம். நாயகன் படத்தில் வரும் கமலஹாசனைப் போல தெரியலையம்மா ! என்று கூறுவோம். நாம் கெட்டவன் என்று இதுவரை யாரிடமும் சொல்லமாட்டோம். அதே போல் சர்க்கரையும், எனக்குத் தெரியலையென்று கூறி விடும். செல்களுக்கு நல்ல சர்க்கரை. கெட்ட சர்க்கரையை பிரித்துப் பார்க்கும் அறிவு கிடையாது. எனவே, செல்கள் சர்க்கரையிடம், நமது உடலில் கணையம் (ஞயnஉசநயள) என்ற உறுப்பு இருக்கிறது, அவரிடம் செல், நீ நல்ல சர்க்கரையாக இருந்தால் அவர் உனக்கு இன்சுலின் (கணைய நீர்) கொடுப்பார், நீ கெட்ட சர்க்கரையாக இருந்தால் இன்சுலின் கொடுக்க மாட்டார் என்று கூறி விடும். இரத்தத்திலுள்ள சர்க்கரைகள் நேரடியாக எந்த செல்லுக்குள்ளேயும் போக முடியாது.

நமது உடலில் கணையம் என்ற (ஞயnஉசநயள) உறுப்புள்ளது. இந்த உறுப்பு பல வேலைகளைச் செய்கிறது. அதில் ஒரு முக்கியமான வேலை என்னவென்றால், இரத்தத்திலுள்ள சர்க்கரை நல்ல சாக்கரையா? கெட்ட சர்க்கரையா? என்று கண்டுபிடிக்கும் ணுரயடவைல ஊடிவேசடிடடநச (தரக்கட்டுபாட்டு அலுவலர்). வேலை கணையம் இரத்தத்திலுள்ள ஒவ்வொரு சர்க்கரையாக எடுத்து ஆராய்ச்சி செய்யும். நல்ல சர்க்கரையாக இருந்தால் அதற்கு இன்சுலின் என்ற முத்திரை கொடுக்கும். கெட்ட சர்க்கரையாக இருந்தால் இன்சுலின் கொடுக்காது. ஒரு பனியன் கம்பெயினில் ணுஊ (ணுரயடவைல ஊடிவேசடிடடநச) என்பவர் இருப்பார். இவர் பனியன் தயாரான பிறகு கடைசியாக வந்து அதைச் சோதித்துப் பார்ப்பார். தரமாக எந்தக் குறையுமில்லாமல் பனியன் இருந்தால் டீமு, கூநளவநன, ளநடநஉவநன என்று வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிப்பார். அதில் ஏதாவது குறையிருந்தால் சுநதநஉவநன என்று ஒதுக்கிக் குப்பைத் தொட்டியில் போடுவார். அதைப் போல் கணையம் என்ற உறுப்பு சர்க்கரையின் தரத்தை சோதனை செய்யும் ஒரு தரக் கட்டுப்பாட்டு அலுவலர். எந்தச் சர்க்கரை ஒழுங்காக ஜீரணமாகிறதோ அந்தச் சர்க்கரைக்கு மட்டும்தான் இன்சுலின் என்ற ஒரு முத்திரை கிடைக்கிறது. இன்சுலினை ஒரு சாவி என்றும் கூறலாம். எந்த சர்க்கரைக்கு இன்சுலின் என்ற சாவி இருக்கிறதோ. அந்த சர்க்கரையால் மட்டுமே செல் என்ற வீட்டின் கதவைத் திறந்து உள்ளே செல்ல முடியும். எந்தச் சர்க்கரை ஒழுங்காக ஜீரணமாகி நல்ல சர்க்கரையாக இருக்கிறதோ. அது மட்டுமே கணையத்திடம் இன்சுலினைப் பெற்று செல்லுக்குள் நுழைய முடியும்.

ஒரு செல் இரத்தத்திலிருக்கும் சர்க்கரையை எடுத்துப் பார்க்கும். அந்தச் சர்க்கரையில் இன்சுலின் என்ற முத்திரை இருந்தால் மட்டுமே நல்ல சர்க்கரை யென்று முடிவு செய்து செல்லிற்குள் எடுக்கும். ஏனென்றால், தரம் குறைந்த சர்க்கரை அந்த செல்லுக்குள் செல்ல முடியாது. எனவே உடலிலுள்ள அனைத்து செல்களையும் நோயிலிருந்து காப்பாற்ற ஆரோக்கியமாக இருக்க கணையம் என்ற உறுப்பு பேருதவியாக இருக்கிறது.

என்ன புது குழப்பமாக இருக்கிறது. நான் பத்து வருடமாக சர்க்கரை நோயாளியாக இருக்கிறேன். பெரிய, பெரிய மருத்துவரிடம் சென்றிருக்கிறேன். பெரிய, பெரிய மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறேன். இது வரை யாரும் நல்ல சர்க்கரை. கெட்ட சர்க்கரையென்று சொல்லவே இல்லையே ? நீங்கள் என்ன புதிதாக உளறுகிறீர்கள் ? என்று சிலருக்கு மனதில் சந்தேகம் ஏற்பட வாய்ப்புள்ளது. நாங்கள் ஒன்றும் சர்க்கரையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் சும்மா உளரவில்லை. இதுவரை நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் 10 வருடமாக உங்கள் நோய் குணமாகாமல் இருக்கிறது. பல வருடங்களாக மருந்து மாத்திரைகள் ச hப் பி ட் டு க் b h ண் டு இருக்கிறீர்கள். இந்த நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை என்ற வித்தியாசம் எப்பொழுது தெரிந்து கொள்கிறீர்களோ, அந்த நிமிடம் முதல் உங்கள் சர்க்கரை நோய் குணப் படுத்தபடும்.

சர்க்கரையென்பது ஊ6 12 டீ6 இது சர்க்கரையின் வாய்ப்பாடு. சர்க்கரை என்பது 6 12 6 ஒரு ஐசோமர் என்று அழைக்கப்படும். நாங்கள் சொல்வது க்ஷiடிhநஅளைவசல படித்தவர்களுக்கு நன்றாகப் புரியும் என நினைக்கிறேன். ஒரு பொருளை எப்பொழுது ஐசோமர் என்று கூறுகிறோமோ, அப்பொழுது அந்த பொருளில் நிறைய வகைகள் (கூலயீந) உள்ளன என்று அர்த்தம்.

சர்க்கரை ஒரு ஐசோமர் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே, சர்க்கரையில் நிறைய வகைகள் உள்ளன. சர்க்கரையின் வாய்ப்பாட்டில் உள்ள கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் அளவு மாறாமல் வேறு வேறு இடங்களுக்கு மாற்றி அமைப்பது மூலமாக சர்க்கரையின் வகை மாறுகிறது. லேக்டோ°, மேனோ°, ஒற்றை சர்க்கரை, கூட்டுச் சர்க்கரை இப்படி சர்க்கரையில் பல வகைகள் உள்ளது. சர்க்கரை (ளுவசரஉவரசந) அமைப்பில் ழ என்ற மூலக்கூறு வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாகவும், டீழ என்ற மூலக்கூறு இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாகவும் மாற்றி அமைப்பதன் மூலமாக சர்க்கரையின் வகையை மாற்றியமைக்க முடியும்.

இப்படி சர்க்கரையின் ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு கட்டமைப்பு (ளுவசரஉவரசந) உள்ளன. எனவே, சர்க்கரையில் பல வகைகள் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு சில குறிப்பிட்ட சர்க்கரை வகைகள் மட்டுமே மனித உடம்பிலுள்ள செல்களுக்குப் பொருந்தும். ஒரு சில சர்க்கரை வகைகள் மனித உடம்புக்கு பொருந்தாது. எந்தெந்த வகை சர்க்கரைகள் மனித உடம்புக்குப் பொருந்துமோ அது அனைத்தும் நல்ல சர்க்கரை. எந்தெந்த வகை சர்க்கரை மனித உடம்புக்குப் பொருந்தாதோ, அது அனைத்தும் கெட்ட சர்க்கரை. கணையம் எந்த வகை சர்க்கரை மனித உடம்புக்கு ஒத்து வருமோ, அதற்கு மட்டுமே இன்சுலின் கொடுக்கும். மனித உடலுக்கு நோயை உண்டு பண்ணும் அல்லது ஒத்து வராத, தேவைப்படாத சர்க்கரைகளுக்கு இன்சுலின் கொடுக்காது.

நாம் மருத்துவமனைகளில் சென்று சர்க்கரை டெ°ட் செய்கிறோம். அதில் 100 இருக்கிறது. 200 இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், அந்த அளவில் எந்தெந்த சர்க்கரை எவ்வளவு இருக்கின்றது? என்று யாரும் அளந்தது கிடையாது. இப்படி மொத்தமாக சர்க்கரை எவ்வளவு இருக்கிறது ? என்று பார்ப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது. நாம் பார்க்கும் சர்க்கரையின் அளவில் எந்தெந்த வகை சர்க்கரை எந்த அளவு இருக்கின்றது என்று பார்ப்பதற்குத் தனியாக மிஷின் உள்ளது. அதன் பெயர் ஐசு ளுவரனல மற்றும் ருஏ ளுயீநஉவசரஅ ளுவரனல. இந்த ளுவரனல உள்ள மிஷின்களில் மட்டுமே இரத்தத்திலுள்ள சர்க்கரையின் வகைகளைக் கண்டறிய முடியும். இந்த மிஷின்கள் எந்த மருத்துவமனையிலும் கிடையாது. பெரிய பெரிய டுயb, ஐளேவவைரவந ஆராய்ச்சிக் கூடங்களில் மட்டுமே உள்ளது. எனவே, சர்க்கரையை சோதனை செய்து பொதுவாகப் பார்ப்பதில் எந்த அர்த்தமுமில்லை. எந்த பிரயோஜனமும் கிடையாது.

மருத்துவமனையில் (க்ஷடடிடின ழுடரஉடிளந டுநஎநட) இரத்தத்தின் சர்க்கரை அளவு என்று எழுதிக் கொடுக்கிறார்கள். ஆனால், இரத்தத்தின் சர்க்கரை அளவை யாரும் பார்ப்பது கிடையாது. இப்பொழுது பார்க்கப்படும் அளவு ஞடயளஅய ழுடரஉடிளந டுநஎநட ஆகும். ஞடயளஅய ழுடரஉடிளந டுநஎநட என்பது வேறு. இரத்தத்தின் சர்க்கரை அளவு என்பது வேறு. எனவே, சர்க்கரை நோயென்பது கணையம் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது.

சர்க்கரை நோயென்பது கணையம் கெட்டுப் போன நோய் அல்ல. நாம் சாப்பிடுகிற சாப்பாட்டில் உள்ள சர்க்கரை ஒழுங்காக ஜீரணமாகாத தால் கணையம் இன்சுலின் கொடுக்க மறுக்கிறதே தவிர கணையம் தவறு செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எப்பொழுது உடலில் இன்சுலின் பற்றாக்குறை ஏற்படுகிறதோ நாம் உணவை ஒழுங்காக ஜீரணம் பண்ணவில்லை என்றுதான் அர்த்தமே தவிர, கணையத்தில் குறை கிடையாது. எனவே, சர்க்கரை நோயென்பது சர்க்கரையை ஒழுங்காக ஜீரணம் செய்யாத நோயே தவிர இதற்கும் உடலிலுள்ள உறுப்புகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எனவே, உணவை எந்த முறையில் சாப்பிட்டால் அது இரத்தத்தில் நல்ல சர்க்கரையாக கலக்கும் என்ற ஒரே ஒரு சுலபமான வித்தையைக் கற்றுக் கொள்வது மூலமாக நாம் இந்த நிமிடத்தில் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியும். கணையம் இன்சுலின் வைத்துக் கொண்டிருக்கிறது, அது உங்களுக்கு தராமல் வேறு யாருக்குக் கொடுக்கும்? நல்ல சர்க்கரை இருந்தால் மட்டுமே கொடுக்கும். கெட்ட சர்க்கரை இருந்தால் கொடுக்காது. இந்த நல்ல சர்க்கரை கெட்ட சர்க்கரை என்ன என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள மேற் கொண்டு சில உதாரணங்கள் மூலமாகத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

நாம் குழந்தையாக இருக்கும் பொழுது நாம் சாப்பிடுகிற உணவு நல்லபடியாக ஜீரணம் நடக்கிறது. ஏனென்றால், குழந்தைக்கு டென்சன், கோபம், பயம் ஏதும் கிடையாது. இப்படி சிறு வயதில் ஒரு குழந்தை உணவு உண்ணும் போது நல்லபடியாக ஜீரணமாகி நல்ல சர்க்கரை மட்டுமே இரத்தத்தில் கலக்கிறது. உதாரணமாக ஒரு குழந்தை சாப்பிடுகிறது. அதில் 500 சர்க்கரை இரத்தத்தில் கலக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குழந்தை நல்லபடியாக ஜீரணம் செய்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது ஒழுங்காக ஜீரணமான 500 சர்க்கரை இரத்தத்தில் கலக்கிறது. இந்த 500 நல்ல சர்க்கரையும் செல்லுக்குள் செல்வதற்கு முயற்சி செய்யும். ஆனால், என்னதான் நல்ல சர்க்கரையாக இருந்தாலும், இன்சுலின் இல்லை யென்ற காரணத்திற்காக செல்லிற்குள் நுழைய முடியாது. இந்த 500 சர்க்கரையும் கணையத்திற்குச் செல்லும். கணையம் இந்த 500 சர்க்கரையை சோதித்து பார்த்து நல்ல சர்க்கரையாக இருப்பதால் கணையம் 500 இன்சுலினை சுரக்கும் ஒரு சர்க்கரைக்கு ஒரு இன்சுலின்தான் கிடைக்கும். அதுவும் நல்ல சர்க்கரையாக இருந்தால் மட்டுமே கணையம் கொடுக்கும். இந்த 500 சர்க்கரையும் நல்ல சர்க்கரையாக இருந்ததால், அனைத்திற்கும் இன்சுலின் கிடைத்து விட்டது. இப்பொழுது குழந்தையின் இரத்தத்தில் 500 நல்ல சர்க்கரை, இன்சுலின் என்ற சாவியுடன் சுற்றிக் கொண்டிருக்கிறது.

குழந்தையின் உடம்புக்கு 300 சர்க்கரை தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். செல்கள் கதவைத் திறந்து இன்சுலின் உள்ள சர்க்கரைகளைத் தனது வேலைக்காக, தேவைக்காக, நோயைக் குணப்படுத்து வதற்காக எடுத்துக் கொள்கிறது. இப்பொழுது உடலில் 300 சர்க்கரை தேவையென்பதால் 300ம் செல்களுக்குள் புகுந்து விட்டது. மீதமுள்ள 200 சர்க்கரை இரத்தத்தில் மீண்டும், மீண்டும் சுற்றி சுற்றி வரும். செல்கள் தேவைக்கு அதிகமான பொருட்களை எப்பொழுதும் உள்ளே எடுத்துக் கொள்ளாது. இரத்தத்தில் 500 சர்க்கரை இருப்பதென்பதற்காக நாம் சேர்த்து வைத்துக் கொள்வோம், பிறகு தேவைப்படுமென்று செல்கள் எடுக்காது. இப்பொழுது தேவையில்லாத ஆனால் நல்ல தரம் வாய்ந்த 200 சர்க்கரைகள் இரத்தத்தில் சுற்றி சுற்றிவருகிறது. இந்த சர்க்கரை என்னவாகும்.

நம் வீட்டிற்கு 500 ரூபாய் சம்பாதித்து எடுத்து போகிறோம். குடும்பச் செலவுக்கு 300 ரூபாய் தேவைப்படுகிறது. மீதமுள்ள 200 ரூபாயை அளவுக்கு அதிகமாக சம்பாதித்து விட்டோமென்று கிழித்து குப்பையில் போடுகிறோமா ? என்ன செய்வோம் ? பத்து, பத்து ரூபாயாக இருந்தால் இரண்டு நூறு ரூபாய் தாளாக மாற்றி நமது பீரோவில் சேர்த்து வைப்போம். அதே போல் குழந்தை சம்பாதித்தது 500 சர்க்கரை, செலவு 300 சர்க்கரை மீதமுள்ள 200 சர்க்கரையை, சர்க்கரைக்கு குளுக்கோ° என்றும் பெயருண்டு.இந்த 200 குளுக்கோ°-ஐ ஒன்று சேர்த்து ஒரு பொருளாக மாற்றும் நமது கல்லீரல், அதன் பெயர் கிளைகோஜன். குளுக்கோ° என்பது ஒரு சர்க்கரை. கிளைகோஜன் என்பது பல சர்க்கரையை ஒன்று சேர்த்தால் கிடைக்கும் ஒரு பொருள். ஒரு ரூபாய் நோட்டிற்கும், நூறு ரூபாய் நோட்டிற்கு முள்ள வித்தியாசம் எப்படியோ அதேபோல் சர்க்கரை என்பது ஒரு ரூபாய். நூறு சர்க்கரையை ஒன்று சேர்த்தால் நூறு ரூபாய் மதிப்புள்ள கிளைகோ ஜென். 500 சர்க்கரை ஒன்று சேர்ந்தால் 500 ரூபாய் மதிப்புள்ள கிளைகோஜன். நாம் எப்படி 10 ரூபாய் நோட்டை 100 ரூபாயாக மாற்றி சேமித்து வைக்கிறமோ அதே போல் தனித் தனி சர்க்கரையாக இருப்பதை ஒன்று சேர்த்து ரூபாய் நோட்டு சர்க்கரையாக அதாவது கிளைகோஜென்னாக அதாவது செறிவூட்டப்பட்ட சர்க்கரையாக மாற்றி நாம் எப்படி பணத்தை பீரோவில் வைக்கிறமோ அதே போல் சர்க்கரையைச் சேமித்து வைக்கும் பீரோ கல்லீரல், தசை நார்கள் (ஆரளஉடநள) மற்றும் மூளை (க்ஷசயin) இப்படி அளவுக்கதிகமாக உள்ள இன்சுலின் உள்ள நல்ல சர்க்கரைகளை உடம்பு சேமித்து வைக்கிறது. இப்பொழுது அந்தக் குழந்தைக்கு சர்க்கரை நோய் கிடையாது.

இந்தக் குழந்தையின் ஜீரணத்தைக் கெடுப்பது முதன் முதலில் அந்தக் குழந்தையின் அம்மாதான். மனதிற்குப் பிடித்தவாறு விளையாடிக் கொண்டு, சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையை முதன் முதலில் நாம் பள்ளிக்கு அனுப்புகிறோம். குழந்தையை 8 மணிக்கு °கூல் வேன் வந்து விடும், எனவே, உடனே தயாராகு என்று தூங்கி கொண்டிருக்கும் குழந்தையை எழுப்பி விருப்பமில்லாமல் குளிப்பாட்டி விருப்பமில்லாமல் பசியில்லாமல் அந்த குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டுகிறோம். சில தாய்மார்கள் குழந்தை சாப்பிட வில்லையென்றால் அடிக்கிறார்கள். ஒரு டம்ளரில் தண்ணீரை வைத்து நடுநடுவே ஊற்றி ஊற்றி முழுங்க வைக்கிறார்கள்.

இது போல குழந்தைக்கு விருப்பமில்லாத போது பசியில்லாத போது உணவு கொடுக்கும் பொழுது அந்த உணவு ஒழுங்காக ஜீரணம் செய்வது கிடையாது. இப்பொழுது அந்தக் குழந்தைக்கு 300 சர்க்கரை ஒழுங்காக ஜீரணமாகி 200 சர்க்கரை ஒழுங்காக ஜீரணமாகவில்லை என்று வைத்து கொள்வோம். இப்பொழுது என்னாகும் இரத்தத்தில் 300 நல்ல சர்க்கரையும், 200 கெட்ட சர்க்கரையும் உள்ளது. இந்தக் குழந்தையின் கணையம் 300 இன்சுலின் மட்டுமே சுரக்கும். கெட்ட சர்க்கரைகளுக்கு இன்சுலின் சுரக்காது. எனவே, கணையம் இன்சுலின் குறைவாக சுரப்பது கணையத்தின் தவறு கிடையாது. ஜீரணத்தின் குறைபாடே என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். இந்த 300 இன்சுலின் பெற்றுக் கொண்ட நல்ல சர்க்கரைகள் செல்லுக்குள் செல்லும். ஆனால், இன்சுலின் கிடைக்காத 200 கெட்ட சர்க்கரைகள் இரத்தத்தில் சுற்றி சுற்றி வரும். இது செல்லிற்குள்ளும் நுழைய முடியாது. கிளைக்கோஜென்னாகவும் மாற முடியாது. எந்தக் கல்லீரல் அளவுக்கதிகமான நல்ல சர்க்கரைகளை, பீரோவில் கொண்டு சேர்த்ததோ, அதே கல்லீரல் இன்சுலின் இல்லாத சர்க்கரைகளை இது கெட்ட சர்க்கரை, இதனால் நம் உடலிற்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று முடிவெடுத்து அந்த சர்க்கரையை சிறுநீரகத்திற்கு அனுப்பி வைக்கும். சிறுநீரகம் இந்தக் கெட்ட சர்க்கரைகளை மூத்திரப் பைக்கு (ருசiயேசல க்ஷடயனனநச) அனுப்பி வைக்கும். மூத்திர பையின் மூலமாக மூத்திரத்தில் கலந்து கெட்ட சர்க்கரை வெளியேறுகிறது.

சர்க்கரை நோயாளிகள் அதிகமாக மூத்திரம் செல்வதும், அந்த மூத்திரத்தில் சர்க்கரை இருப்பதற்கும் காரணம் கணையமோ, கல்லீரலோ, சிறுநீரகமோ, மூத்திரப் பையோ கிடையாது. ஒரு கம்பெனியில் தயாரிக்கப்படும் தரம் குறைந்த பொருட்களை எப்படி வெளியே வீசுகிறார்களோ அதே போல் உணவு ஒழுங்காக ஜீரணமாகாமல் கிடைத்த கெட்ட சர்க்கரையை நம் உடம்பு வேண்டாமென்று வெளியே கழிவாக அனுப்புகிறது.

இந்த மூத்திரத்தைப் பிடித்து அதில் சுகர் எவ்வளவு இருக்கிற தென்பதை ஆராய்ச்சி செய்து உங்களை சர்க்கரை நோயாளிகள் என்று கூறுகிறார்கள். இது ஒரு தவறான கருத்தாகும். வடிவேல் ஒரு படத்தில் நீ புடுங்குற ஆணி அனைத்தும் தேவையில்லைஎன்று கூறுவது போல் மூத்திரம் வழியாக வெளியே செல்லும் அனைத்து சர்க்கரையும் தேவையில்லாத சர்க்கரையென்று புரிந்து கொள்ளுங்கள். நம் உடலிற்கு அறிவுள்ளது என்று நாம் ஏற்கனவே பார்த்தோம். கிட்னியும், மூத்திரப் பையும் அறிவு கெட்டத்தனமாக ஒரு நல்ல சர்க்கரையை என்றுமே வெளியேற்றாது. கிளைக்கோஜென்னாக மாறும் அனைத்து சர்க்கரைகளும் நல்ல சர்க்கரை. மூத்திரம் வழியாக வெளியேறும் அனைத்தும் கெட்ட சர்க்கரை. உடல் என்றுமே ஒரு நல்ல சர்க்கரையை மூத்திரம் வழியாக வெளியேற்றாது. எனவே, மூத்திரத்தில் சர்க்கரை வருகிறதென்று தயவு செய்து பயப்படாதீர்கள். அது சாக்கடைக்குச் செல்ல வேண்டிய சர்க்கரை.

இப்பொழுதும் இந்தக் குழந்தைக்கு சர்க்கரை நோய் கிடையாது. இந்தக் குழந்தை படித்துப் பெரிய ஆளாக மாறி ஒரு நிறுவனத்திற்கு தலைவராகிறது என்று வைத்துக் கொள்வோம். முதலாளிகள் என்றுமே காலையில் ஒழுங்காக சாப்பிட மாட்டார்கள். மதியானம் பசியெடுக்கும் பொழுது சாப்பிடாமல் வேலையைப் பார்த்து கொண்டிருப்பார்கள். இரவு 11 மணி 12 மணிக்கு போல வீட்டிற்கு வந்து தேவையில்லாமல் அளவுக்கதிகமாக சாப்பிடுவார்கள். இப்படித் தவறான உணவுப் பழக்க வழக்கம் அதிகமாகும் பொழுது ஜீரணம் ஒழுங்காக ஆகாமல் கெட்ட சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.

உதாரணமாக, ஒருவருக்கு 300 கெட்ட சர்க்கரையும், 200 நல்ல சர்க்கரையும் இரத்தத்தில் கலக்கிற தென்று வைத்துக் கொள்வோம். 200 நல்ல சர்க்கரைக்கு இன்சுலின் கிடைத்தவுடன், செல்லிற்குள் புகுந்து விடும். 300 சர்க்கரை இன்சுலின் கிடைக்காததால் மூத்திரம் வழியாக வெளியேறி விடும். ஆனால், அவருக்கு இன்று உடலுக்கு 300 சர்க்கரை தேவைப்படுகிறது. 200 மட்டுமே உள்ளே சென்றுள்ளது. 100 பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உடல் என்ன செய்யும். நமது வீட்டில் 500 ரூபாய் சம்பாதித்து வருகிறோம். அதில் 300 ரூபாய் கள்ள நோட்டு, 200 ரூபாய் நல்ல நோட்டு. 200 ரூபாயை குடும்ப செலவுக்கு பயன்படுத்துவோம். 300 ரூபாயை கள்ள நோட்டு என்று தெரிந்தவுடன் கிழித்து குப்பையில் போடுவோம். அதே போல் எப்பொழுது கள்ள சர்க்கரை உடலுக்குள் செல்கிறதோ, உடல் கிழித்து மூத்திரம் என்ற குப்பைத் தொட்டிக்கு அனுப்புகிறது. ஆனால், உங்க குடும்பத்திற்கு 300 ரூபாய் செலவுக்குண் பணம் தேவைப்படுகிறது. 200 ரூபாய் மட்டுமே நல்ல நோட்டாக இருந்ததால் பயன்படுத்த முடிந்தது. இப்பொழுது 100 ரூபாய் பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளது. இப்பொழுது என்ன செய்வீர்கள் ஏற்கனவே சம்பாதித்து வைத்த 100 ரூபாயை பீரோவிலிருந்து எடுத்து வந்து செலவு செய்வீர்களல்லவா அதே போல் எப்பொழுது செல்களுக்கு நல்ல சர்க்கரை இரத்தத்தில் இல்லையோ இரு புருவத்திற்கு இடைப்பட்ட பகுதியிலிருக்கும் பிட்யூட்டரி சுரப்பி ஹஉவா என்ற நீரை சுரக்க ஆரம்பிக்கும். இந்த நீர் சிறுநீரகத்திற்கு மேலே அட்ரினல் சுரப்பியை (தொப்பி சுரப்பி) வேலை செய்ய வைக்கும். இந்த அட்ரினல் சுரப்பி ஏற்கனவே கிளைக்கோஜென்னாக மாற்றி கல்லீரல், சதை நார்கள், மூளை ஆகிய பகுதிகளிலுள்ள ரூபாய் நோட்டு சர்க்கரைகளை எடுத்து வந்து செலவு செய்யும். இப்படி சிறு வயது முதல் நாம் நிறைய சர்க்கரை சம்பாதிக்கும் பொழுது பீரோவில் சேர்த்து வைக்கிறோம். சர்க்கரை பற்றாக்குறை ஏற்படும் போது பீரோவிலிருந்து செலவு செய்கிறோம்.

எனவே, ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். லோ சுகரில் யாருக்கும் உலகத்தில் மயக்கம் வராது. ஏனென்றால், எப்போது சர்க்கரையின் அளவு குறைகிறதோ, பிட்யூட்டரி, அட்ரினல் சுரப்பி ஆகியவை உடனே சேமித்து வைத்த சர்க்கரையை எடுத்து ரீ செலவு செய்யும் பொழுது இப்படியொரு அமைப்பு நம் உடம்பில் இருக்கும் பொழுது லோ சுகர் ல் மயக்கம் வரும் என்பது ஒரு தவறான கருத்தாகும். இப்பொழுதும் இந்தக் குழந்தைக்கு சர்க்கரை நோய் கிடையாது. இப்படி பல ஆண்டுகளாக நாம் சில நேரங்களில் பீரோவில் சேமிப்போம். சில நேரங்களில் செலவு செய்வோம். உடலில் கிளைக்கோஜென் இருக்கும் வரை யாருக்கும் மயக்கம் வரவே வராது. ஒரு காலக் கட்டத்தில் நம் உடம்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கிளைக்கோ ஜென் தீர்ந்து விடும் பொழுது உடலில் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

உதாரணமாக, ஒருவர் சாப்பிடுகிறார். 500 சர்க்கரை இரத்தத்தில் கலக்கிறது. அதில் 400 கெட்ட சர்க்கரை, 100 நல்ல சர்க்கரை. இந்த 400 கெட்ட சர்க்கரையும் இன்சுலின் கிடைக்காமல் மூத்திரம் வழியாக வெளியேறுகிறது. 100 நல்ல சர்க்கரை இன்சுலின் வாங்கிக் கொண்டு செல்களுக்குள் புகுந்து விடுகிறது. ஆனால், உடலின் தேவை 300 சர்க்கரை 200 பற்றாக்குறை. இப்பொழுது கிளைக்கோஜெனை வெளியே எடுக்க உடல் முயற்சி செய்கிறது. ஆனால், இவரது உடலில் சேமித்த சர்க்கரை தீர்ந்துவிட்டது. சேமிப்பில் எதுவுமேயில்லையென வைத்துக் கொண்டால் என்னவாகும்? அட்ரினல் சுரப்பி, கிளைக்கோஜென் தீர்ந்து விட்டதென்று கூறும். அப்பொழுது இரத்தத்தில் செல்களுக்குள்ளே செல்ல நல்ல சர்க்கரைகள் இல்லாமல் பெட்ரோல் தீர்ந்த கார் போல. கரண்ட் போன காற்றாடி போல உடனே நின்று போகும். சர்க்கரை நோயாளிகள் மயக்கம் வருவதற்கு காரணம் சர்க்கரை அதிகமாக இருப்பதோ, அல்லது குறைவாக இருப்பதோ கிடையவே கிடையாது. சர்க்கரை பற்றாக்குறை ஏற்படும் பொழுது சேமித்து வைக்கப் பட்ட கிளைக்கோஜன் எப்பொழுது இல்லையோ அப்பொழுது மட்டுமே உலகத்தில் ஒரு மனிதனுக்கு மயக்கம் வரும். சர்க்கரை நோயாளிகள் மயக்கம் போடுவது கணையத்தின் குறைபாடு கிடையாது. சர்க்கரை நோயும் கிடையாது. உடலில் சேமித்து வைக்கப் பட்ட சர்க்கரை தீர்ந்து விட்டதென்று மட்டுமே அர்த்தம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.