40
நல்ல எண்ணெய் என்ற பெயரில் இப்பொழுது கடைகளில் கிடைக்கும் எந்த எண்ணெயும் உண்மையிலேயே நல்ல எண்ணெய் கிடையாது. நல்ல எண்ணெய் என்பதற்கு எள்ளு எண்ணெய் என்று பொருள். நீங்கள் கருப்பு எள்ளு வாங்கி நீங்களே எண்ணெய் ஆட்டும் செக்கில் கொண்டு போய் கொடுத்து அரைத்து அந்த எண்ணெயை சாப்பிட்டுப் பாருங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு எது நல்ல எண்ணெய் என்ற வித்தியாசம் தெரியும். நம்மில் பல பேருக்கு ஒரிஜினல் எள்ளு எண்ணெய் எப்படி இருக்கும் என்று தெரியாது. உங்களது தாத்தா, பாட்டியிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் இதைப் பற்றி விளக்கமாகக் கூறுவார்கள். தயவு செய்து கடையில் விற்கும் எந்த எண்ணெயும் வாங்கிச் சாப்பிடாதீர்கள். குறிப்பாகக் கொழுப்பு நீக்கப்பட்ட எண்ணெய் என்று பந்தாவாக விளம்பரம் செய்யும் எந்த எண்ணெயும் வாங்கி சாப்பிடாதீர்கள். ஏனென்றால் நாம் எண்ணெய் சாப்பிடுவதற்கு அர்த்தமே அதில் கொழுப்பு இருக்கிறது என்பதற்காகத்தான், கொழுப்பு இல்லாத ஒரு எண்ணெய் குப்பையில் கொட்ட வேண்டிய ஒரு குப்பைப் பொருள்.
நீங்கள் டீசபைiயேட எள்ளு எண்ணெய்க்கு எங்கு சென்றாலும் கண்டிப்பாக ஏமாற்றம் மட்டுமே கிடைக்கும். எனவே, 20 கிலோ கருப்பு எள்ளு வாங்கி வந்து வெயிலில் காய வைத்துக் கற்களை அகற்றி அதனுடன் 1 கிலோ பனங்கருப்பட்டி சேர்த்து அருகில் உள்ள எண்ணெய் ஆட்டும் கடையில் கொண்டு போய் கொடுத்தால் உங்கள் கண் முன்னாலேயே அரைமணி நேரத்தில் எள் எண்ணெய்யாக மாற்றிக் கொடுப்பார்கள். அதை 1 நாள் வெயிலில் காய வைத்தால் அதிலுள்ள கழிவுப் பொருட்கள் கீழே தங்கும். இப்பொழுது சுத்தமான ஒரிஜினல் எண்ணெய் தயார். இப்படி உங்கள் வீட்டிற்குத் தேவையான எள் எண்ணெயை நீங்களே தயார் செய்து வைத்துக் கொண்டால் நம் உடலில் ஆரோக்கியம் என்றுமே இருக்கும். எனவே, நமது வீட்டில் இனிமேல் ஒரிஜினல் எள் எண்ணெயே பயன்படுத்துங்கள் ஒரிஜினல் எள் எண்ணெய் என்று யார் கொடுத்தாலும் வாங்காதீர்கள். நீங்களே செய்தால் மட்டுமே அது உண்மை.
நமது முன்னோர்கள் அனைவரும் எள் எண்ணெயைச் சாப்பிட்டதால் எலும்பு சம்பந்தப்பட்ட எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக திடமாக வாடிநந்தார்கள். எனவே, நமது சிகிச்சையில் கொழுப்பு சம்பந்தப்பட்ட எல்லாப் பொருள்களையும் குறிப்பாக தேங்காய் மற்றும் எண்ணெய்ப் பலகாரத்தை சாப்பிடுவதால் மட்டுமே கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
எனவே, இந்தப் புத்தகத்தை முழுவதுமாக படிப்பதன் மூலமாக இனிமேல் கொழுப்பு சம்பந்தப்பட்ட எந்த நோயாக இருந்தாலும் நாம் கொழுப்புப் பொருட்களையும் எண்ணெய் தேங்காய் பொருட்களையும் சாப்பிடுவதன் மூலமாக நல்ல கொழுப்பாக (ழனுடு) மாற்றி இரத்தத்தில் கலக்கும் பொழுது கொழுப்பு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணப்படுத்த முடிகிறது. நல்ல கொழுப்பை அதிகமாக இரத்தத்தில் கலந்தால் கெட்ட கொழுப்பு தானாக வெளியே வருகிறது. நமது சிகிச்சை முறைப்படி ஒன்று அல்லது மூன்று மாதங்கள் சாப்பிட்ட பிறகு மீண்டும் உங்கள் கொழுப்பு சம்பந்தப்பட்ட டெ°டுகளை எடுத்துப் பார்த்து கெட்ட கொழுப்பு குறைந்துள்ளதைக் கண்டுபிடித்து சந்தோஷமாக வாழுங்கள். வாழ்வோம் ஆரோக்கியமாக !