70
1. மனதின் மணம் (ஹீலர் பாஸ்கர்)
2. மனவளக்கலை மன்றம் . தத்துவஞானி
வேதாத்திரி மஹரி´ ஐயா
3. ஸ்ரீ பகவத் ஐயா
4. பிரம்மகுமாரிகள்
5. விபாஸனா
1. மனதின் மணம்
மேல் மனம், அடிமனம், ஆழ்மனம் என்று மனதில் தோன்றும் அனைத்துக் எண்ணங்களையும், பதிவுகளையும் தேவையானவற்றை வைத்துக் கொண்டு எதிர்மறை எண்ணப் பதிவுகளை அழித்து சிறப்பானதொரு வாழ்விற்கு வழிகாட்டும் அற்புத படைப்பாக ஹீலர் பாஸ்கர் அவர்கள் மனதின் மணம் எனும் டிவிடி மற்றும் புத்தகம் வெளியிட்டுள்ளார். தேவைப்படுவோர் கிரி ஐயா பப்ளிகேன்ஸ், கோவை. தொடர்புக்கு : 0422 2349660, +91 96290 32767.என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
2. மனவளக்கலை மன்றம்
மனதைப்பற்றி மேலும் சிறப்பாக அறிந்து கொள்ள அருகில் உள்ள மனவளக்கலை அல்லது அறிவுத் திருக்கோயிலுக்கு செல்லுங்கள். அங்கே தத்துவஞானி வேதாத்திரி மஹரி´ ஐயா அவர்களால் உருவாக்கப்பட்ட பல பயிற்சிகளும் வகுப்புகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த வகுப்புகளில் எண்ணம் ஆராய்தல், சினம் தவிர்த்தல். கவலை ஒழித்தல் மற்றும் ஆசை சீரமைத்தல் போன்ற மனதை அமைதியாக வைத்துக் கொள்ளக்கூடிய அனைத்துப் பயிற்சிகளை கற்றுக் கொள்ளலாம்.
3. ஸ்ரீ பகவத் ஐயா
“ஞானியரை வணக்குவது சிறப்பல்ல, நீங்களே ஞானியாவதுதான் சிறப்பு‘ என்று கூறும் இவரால் பலர் ஞானத்தெளிவு பெற்றிருக்கின்றனர். ஞானம் என்றால் என்ன? அதை எவ்வாறு அடைவது என்பதை திருச்செந்தூரை சேர்ந்த ஸ்ரீ பகவத் ஐயா அவர்கள் எளிமையாக அனைவருக்கும் புரியும் படி மனதைப்பற்றி தெளிவாக புரியவைக்கிறார்.
மேல் மனம், அடி மனம் மற்றும் ஆழ்மனம் இவற்றிக்கு உள்ள வித்தியாசத்தை நமக்கு புரியவைத்து மனதை அமைதிப்படுத்த ஒரு நல்ல வழி காட்டுகிறார்.
மேலும் விபரங்களுக்கு ழழழ. ஸ்ரீrழிஸழிழிஆழிது.லிrஆ என்ற வெப் சைட்டில் இலவசமாக இவரின் புத்தகங்கள் மற்றும் ஆடியோவை டவுன்லோடு செய்து பயன்பெறலாம். அல்லது 99942 05880, 978916555 என்ற எண்ணில் ஐயாவை தொடர்பு கொள்ளுங்கள்.
4. பிரம்மகுமாரிகள்
எனக்கு மனதிற்கும், புத்திக்கும், ஆழ்மனதிற்கும் வித்யாசம் தெரியாமல் குழப்பமாக இருந்தபோது ஓசூரில் உள்ள பிரம்மகுமாரிகள் அமைப்பை சார்ந்த வேடியப்பன் சகோதரர்தான் என்னை ராஜஸ்தானில் உள்ள மவுன்ட் அபுவுக்கு அழைத்துச் சென்று பல நாட்கள் பலவிதமான விளக்கங்களை கொடுத்து புரியவைத்தார். இவர் நமது அனாடமிக் சிகிச்சையில் பல விசயங்களை தெளிவுப்படுத்த உதவியாக இருந்தவர்.
எனவே மனது, புத்தி, மற்றும் ஆழ்மனதைப்பற்றி மேலும் புரிந்துகொள்ள அருகில் உள்ள பிரம்மகுமாரிகள் சென்டருக்கு சென்று கற்றுக் கொள்ளுங்கள்.
5. விபாஸனா
உலகின் பலநாடுகளில் விபாஸனா தியானம் கற்றுத் தரப்படுகிறது. உடற்பயிற்சி, யோகா என்று எதுவுமே செய்யாமல் மூச்சுக்காற்றை மட்டும் கவனிப்பதன் மூலம் தியான பயிற்சி விபாஸனா இந்த தியானப் பயிற்சியினைப் பற்றி மேலும் விரிவாகத் தெரிந்து கொள்ளவும் விபாஸனா தியானம் கற்கவும் கீழ்கண்ட விபாஸனா தியானம் கற்கவும் கீழ்கண்ட இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம். www.dhamma.org செல் : 94442 80952.