| அவ்வாறு கடந்த இ௫பத்தைந்தாண்டுகளாக தான் படித்தும், கண்டும், கேட்டும் சுயசோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகள் மூலமாக உணா்ந்த இயற்கை வழி முறைகளை உலக மக்கள் அனைவ௫க்கும் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு ஊா்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் சென்று அனைத்து மக்களுக்கும், இதைப் பற்றிய செய்திகளை அனைவ௫க்கும் கற்பித்து வந்தார். காலப்போக்கில் மலேசியா, சிங்கப்பூா், சவூதி அரேபியா, மஸ்கட், கத்தார், குவைத் போன்ற வெளிநாடுகளிலும் சென்று களப்பணியைச் செய்து வந்தார். பின்னா் இதை மேன்மேலும் சிறப்பாகவும், விரிவாகவும் அனைத்து மொழிகளிலும் இந்த சிகிச்சை முறையை பதிவு செய்து உலக மக்களுக்கு அளிக்கும் நோக்கத்திலும், இயற்கை ம௫த்துவ முறை, இயற்கை விவசாயம், கல்வி போன்றவை சிறப்புற தன்னால் முடிந்த சேவைகளை செய்யவும் கடந்த ஆண்டு (28.09.2013) அன்று அனாடமிக் தெரபி ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளை உ௫வாக்கி தொடா்ந்து மக்களுக்கு சேவை செய்து வ௫கிறார். |