"

1. நேரடியாக சிகிச்சை நடைபெறும் இடத்திற்கு நீங்கள் வந்து ஹீலர் பாஸ்கரை நேரில் சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். எந்த ஊரில், எந்தநாட்டில், எந்த நாளில் நேரடியாக சந்திக்க முடியும் என்பதை இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசியில் அல்லது இணையதளம் WEBSITE மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

2. நேரில் வர முடியாதவர்கள் இந்த புத்தகத்தை ஆரம்பம் முதல் கடைசி வரை பொறுமையாக படித்தால் நீங்கள் நேரில் வர வேண்டிய அவசியமே இல்லை. இந்த புத்தகமேஉங்கள் நோயை குணப்படுத்தும் ரகசியத்தை உங்களுக்கு கற்றுக் கொடுத்துவிடும்.

3. புத்தகத்தை படிக்க தெரியாதவர்கள் அல்லது கண் பார்வை இழந்தவர்கள் இந்த புத்தகத்தில் உள்ள அனைத்து வி­யங்களையும் ஆடியோ மற்றும் வீடியோ DVDகளும் கிடைக்கும். அந்த DVDகளை வாங்கி வீட்டிலேயே பார்ப்பது அல்லது கேட்பது மூலமாக நீங்களே உங்களது நோய்களை குணப்படுத்திக்கொள்ளலாம்.

4. www.anatomictherapy.com என்ற இணையதளத்தில் சென்று தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் மற்றும் அனைத்து மொழிகளிலும் இந்த சிகிச்சையை இலவசமாக DOWNLOAD செய்து நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் நோய்களை குணப்படுத்திக் கொள்ளலாம்.

5. இன்டர்நெட்டில் YOUTUBE , HEALER BASKAR அல்லது செவிவழி தொடு சிகிச்சை அல்லது ANATOMIC THERAPY என்ற பெயரில் இருக்கும் ஆடியோ, வீடியோ மற்றும் புத்தகங்களை இலவசமாக பார்த்து மற்றும் டவுன்லோடு செய்து நீங்களே உங்கள் நோய்களை வீட்டில் இருந்தபடியே சரி செய்து கொள்ளலாம்.

6. உங்கள் ஊரில் இந்த சிகிச்சை உங்கள் ஊர் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் உங்கள் ஊரிலோ, நாட்டிலோ ஏற்பாடு செய்தால் நாம் நேரடியாக வந்து அனைவருக்கும் சிகிச்சை கொடுக்க முடியும். இதில் சுமார் 500 முதல் 1000 பேர் வரை ஒன்று சேர்ந்தால் உங்கள் ஊருக்கு நேரடியாக வர முடியும். இந்த நிகழ்ச்சியை நடத்த குறைந்த பட்சம் ஒரு நாள் தேவைப்படும். அதிகபட்சம் மூன்று நாள் தேவைப்படும். இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் றீஸ்ரீலிஐவிலிr உங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் வருகிற அனைவருக்கும் இலவசமாக மதிய உணவைக் கொடுத்து இலவசமாகவே நடத்தினால் மிகவும் நன்றாகவே இருக்கும். ஒரு வேலை இலவசமாக நடத்த முடியவில்லை என்றால் குறைந்த கட்டணத்தில் இலாப நோக்கத்தில் இல்லாமல் வியாபார நோக்கத்தில் இல்லாமல் நடத்தினால் நன்றாக இருக்கும். அனாடமிக் செவி வழித் தொடு சிகிச்சை பற்றி www.anatomictherapy.org அறியலாம்.

7. அல்லது உங்கள் ஊரில் இந்த சிகிச்சையை பலருக்கு கொடுக்க வேண்டும் என்று எண்ணம் உள்ளவர்கள் ஒரு பொது இடத்தில் வீடியோ அல்லது Projector மூலமாக இதை காண்பிக்கலாம். அல்ல TV _ Satellite TV அல்லது லோக்கல் TV களில் இந்த DVD ஐ நம்மிடம் முன் அனுமதி பெற்று இலவசமாக ஒளிபரப்பலாம்.

8. இந்த புத்தகத்தில் உள்ள வி­யங்களை மற்ற புத்தகங்களிலோ, அல்லது செய்திதாள்களிலோ, மொத்தமாகவோ, அல்லது பகுதி பகுதியாகவோ முன் அனுமதி பெற்று வெளியிட்டு பொது மக்களுக்கு இந்த வி­யத்தை கொண்டு சேர்க்கலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.