அரசு உலர்ந்து உதிர்வதற்குரிய பொருளாதார அடிப்படை
கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனம் (பிராக்கேவுக்கு எழுதிய கடிதம், 1875 மே 5, 1891_ல் தான் ழிமீuமீ ஞீமீவீt, மலர் 9, இதழ் 1 ல் அச்சிடப்பட்டது; ருஷ்யனில் ஒரு தனிப் பதிப்பாய் வந்துள்ளது) என்ற தமது நூலில் மார்க்ஸ் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கமாய் விளக்கிக் கூறுகிறார். சிறப்பு மிக்க இந்நூலின் எதிர்வாதப் பகுதி லஸ்ஸாலியத்தை விமர்சிக்கிறது. இப்பகுதி இந்நூலின் கருப் பகுதியை _ அதாவது கம்யூனிசத்தின் வளர்ச்சிக்கும் அரசு உலர்ந்து உதிர்வதற்கும் இடையிலுள்ள தொடர்பைப் பகுத்தாயும் பகுதியை _ ஓரளவுக்குப் பின்னுக்குத் தள்ளுவதாய் உள்ளது.