தொடர்ச்சி – கூடுதலாய் எங்கெல்ஸ் அளித்த விளக்கங்கள்
கம்யூனுடைய அனுபவத்தின் முக்கியத்துவம் பற்றிய அடிப்படைக் கருத்துக்களை மார்க்ஸ் எடுத்துரைத்தார். எங்கெல்ஸ் இதே பொருளுக்கு மீண்டும் மீண்டும் திரும்பி மார்க்சின் பகுத்தாய்வையும் முடிவுகளையும் விளக்கிக் கூறினார். சில சந்தர்ப்பங்களில் இப்பிரச்சனையின் பிற கூறுகளை எங்கெல்ஸ் அத்தனை வலிமையோடு தெள்ளத் தெளிவாய் விளக்குவதால், அவருடைய விளக்கங்களைத் தனியே விவரிப்பது அவசியமாகும்.